மனதை பதற வைக்கும் ஒரு துயரம்
எவ்வளவு பேர் இது குறித்த செய்தியை வாசித்தீர்கள் என்று தெரியவில்லை ? சமீபத்தில் ராஜஸ்தானில் நிகழ்ந்த மழை வெள்ளப் பெருக்கில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவர், கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் சிக்கித் தவித்து, உயிருக்குப் போராடி, பின்னர் ஒருவர் பின் ஒருவராக, கரையில் நின்றபடி ·பால்னா என்ற ஊரின் மொத்த மக்களும் அரசு இயந்திரமும் பார்த்துக் கொண்டிருக்க, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர் ! தங்களை எப்படியாவது காப்பாற்றும்படி, அவர்கள் கதறியும், வெள்ளத்தின் வேகத்தைக் கண்டு அஞ்சி, ஒருவரும் முன் வரவில்லை. வேடிக்கை பார்த்தவர்களில், ராஜஸ்தான் அமைச்சர் லஷ்மி நாராயண் தேவும் ஒருவர் !
அவ்வழியாக சென்று கொண்டிருந்த இரு இந்திய ராணுவ வீரர்கள் தைரியமாக வெள்ளத்தில் குதித்து அவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். ஒரு வீரர் தண்ணீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டார். இன்னொருவர் தண்ணீர் வடிந்த பின் மீட்கப்பட்டதாக தெரிகிறது. மேலே சொன்ன ஐவர், ஒரு பாலத்தை கடப்பதற்காக, காரில் சென்றபோது, காரி நதியின் வெள்ளப்பெருக்கில் சிக்கினர் என்று தெரிகிறது. கார் பாலத்தின் மேல் சென்றபோது, சில நொடிகளில், மூழ்கி விட்டது. காரின் மேல் கூரையில் ஏறிய ஐவரும் உதவிக்காக கூக்குரலிட்டனர். ஒரு மணி நேரத்தில் வந்த போலீசார், மீட்பதற்கு வேண்டிய உபகரணங்கள் எதையும் எடுத்து வரவில்லை என்பது பெரிய கொடுமை. அரசு அதிகாரிகளும் அவ்விடத்திற்கு வந்து, என்ன செய்வது என்று புரியாமல் நின்று கொண்டிருந்தனர். வெள்ளப்பெருக்கின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், நீரில் குதிப்பதற்கு யாருக்கும் தைரியம் வரவில்லை.
மக்களில் சிலர் சிக்கியிருந்தவரை நோக்கி கயிற்றை வீசினர். நதியின் அகலம் கிட்டத்தட்ட 200 அடி இருந்ததால், அதுவும் பயனில்லாமல் போயிற்று. வெள்ள நீரின் மட்டம் உயர உயர, அந்த ஐவரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்தபடி, கரையில் இருந்த மக்களை காப்பாற்றும்படி கெஞ்சினர். மக்களில் சிலர், பல பிளாஸ்டிக் குழாய்களை ஒன்றாக இணைத்து அவர்களை மீட்க எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. படை சூழ வந்த அமைச்சரும் கையை பிசைந்தபடி இவையனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தி சாயும் நேரம், ஐவரில் ஒரு வாலிபர் தடுமாறி நீரில் விழுந்து மறைந்தார். மகனை மீட்க அவன் பின்னே குதித்த அவனது தந்தையும் மூழ்கினார். மற்ற மூவரும், மனதை உருக்கும் கூப்பாடுகளுக்கிடையில், ஒருவர் பின் ஒருவராக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர் ! இறை தரிசனத்துக்காக பயணப்பட்டவர்களை, எமன் கூட்டிச் சென்றது என்ன ஒரு அநியாயம் பாருங்கள் !
ராஜஸ்தான் அரசின் தலைமைச் செயலாளர், விமானப்படையை தொடர்பு கொண்டு, ஹெலிகாப்டரை அனுப்பும்படி கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. மேக மூட்டத்தினால், ஹெலிகாப்டர் வருவது தடைபட்டு விட்டதாம். ஜோத்பூரிலிருந்து ஒரு ராணுவ அணி அனுப்பப்பட்டதாகவும், அதுவும், போக்குவரத்து நெரிசலில் சிக்கி, சம்பவ இடத்திற்கு வர இயலாமற் போனதாகவும் தெரிகிறது.
இவையெல்லாம் வெறும் சப்பைக்கட்டாகவே தோன்றுகிறது. இதே ஒரு அரசியல்வாதியோ அவரின் நெருங்கிய உறவினரோ இவ்வாறு சிக்கிக் கொண்டிருந்தால், அரசு காப்பாற்ற பெரு முயற்சி எடுத்திருக்கும். எட்டு மணி நேரத்தில், எதுவும் செய்ய இயலவில்லை என்பதை அவ்வளவு எளிதாக ஒப்புக் கொள்ள முடியவில்லை ! என்ன தொழில்நுட்ப வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு என்ன பயன் ? 480 நிமிடங்கள் இருந்தும், ஐந்து உயிர்களை காப்பாற்ற ஒரு இழவும் செய்ய இயலா ஒரு சூழலில் !!!
என்றென்றும் அன்புடன்
பாலா
17 மறுமொழிகள்:
வயிறு எரிகிறது
வேதனை.
kodumai
பாலா!
அரசியல் வாதிகளுக்கும்;சினிமாக்காரருக்கும்;சாமியார்களுக்கும் தான் நம் நாடுகளில் ஆலவட்டம் தூக்குவாங்க. நம் நாடுகளில் பிறந்ததே! வீண் என எண்ணவைக்கிறார்கள். மனிதயுயிர் மலிவாகிவிட்டது.மனித உயிரைக் காப்பாற்ற ஆன கெலிகொப்டர் இல்லை. ஏவுகணைகள் பற்றி அதிகம் செலவு செய்கிறோம் .சீ
யோகன் பாரிஸ்
அந்த கன்றாவி செய்தியைப் நானும் படித்தேன்....
5 - 10 நிமிடமா...ஐயோ பாவம் Accident என்று சொல்வதற்கு, 8 மணி நேரம்...!! இது வரை 8 மணி நேரம் Traffic jam பற்றி கேள்வியே பட்டதில்லை....!!
சைரன் போட்டு அரசியல் தலைவர்களுக்கு ரோட்டில் சிறப்பு பாதை அமைப்பது போல் போலீஸ் அமைத்திருந்தால் குறைந்தது ஒருவரையாவது காப்பாற்றியிருக்கலாம்..
வேறு ஏதாவது ஒரு நாட்டில் இப்படி நடக்க விடுவார்களா?
காத்திரீனா வந்த போது US ல் கூட அப்படி நடந்ததான நண்பர் சொல்லித் தெரியவந்தது!! 3 நாட்கள் தவிக்க விட்டார்களாம்...!
அந்த அமைச்சரைத் தூக்கி வெள்ளத்துல போட்ருக்கவேண்டாமோ இந்த மக்கள்?
என்ன அநியாயம். சே. நெஞ்சம் கனக்கிறது. வயிறு எரிகிறது.
இது என்னங்க அநியாயம்? எட்டுமணி நேரம் இருந்துருக்கே.
அடக்கடவுளே.
படிக்கவே மனது பதைக்கிறது. அக்குடும்பத்தினரின் ஆத்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பதிவை வாசித்த அனைவருக்கும் நன்றி !
oh no its really b ad..feel very sad..after reading this
எப்படித் தவித்தார்களொ.
அந்தப் பையன் பள்ளத்தில் விழுந்த போது மீட்டவர்கள்,
ராஜஸ்தானில் இல்லையா?
அத்தனை பப்ளிசிடி அதற்கு கொடுத்தார்களே.
இந்தக் கொடுமை கூட நடக்குமா.
இந்தப் பாவம் எல்லோர் தலையிலும் தான்.
கொடுமை
என்ன கொடுமை சரவணன்....
பதிவை வாசித்த அனைவருக்கும் நன்றி !
read the news in detail first please
it was only 2 hours before the military was informed. normal travel time is 2 and a half hours. 8 hours was the struggling time including the local people tried saving them.
i donot support governemnt here - but i want to make a point that we need to be very clear before commenting on certain efforts. Being emotional alone and crying is not the right approach!
Raghavan
Raghavan,
I read the news in detail. All the same, you are talking smartly :(
Actually, the point is not when the army was informed by somebody from the Govt.
The helpless persons were sitting on top of a car in the flooded water for nearly 8 hours and the Local Administration should have 'started' the process of rescuing those people. You have mentioned yourself that "8 hours was the struggling time" !!!
I am not being emotional here, just plainly frustrated by our attitude of apathy :(
enRenRum anbudan
BALA
:-(((
Post a Comment